ஞாயிறு, அக்டோபர் 30, 2011

கதை ரெடி ! கேப்டன் ரெடியா ?


ஏகஇறைவனின் திருப்பெயரால்..

கதை ரெடி ! கேப்டன் ரெடியா ?


நம் நாட்டில் சட்டம் என்ற ஒன்று உள்ளதா ? அது செயல் படுகிறதா ? என்று அவ்வப்பொழுது பலரால் பேசப்பட்டு வருவதும் அது சில நேரங்களில் நிரூபணமாகி விடுவதையும் பார்த்து வருகிறோம்.

சமீபத்தில் கொலை> கற்பழிப்பு> வழிப்பறி என்ற 18 வழக்குகளில் சிக்கியுள்ள சங்கர் என்ற கொலை கைதியை கடந்த 16 ம் மேதி கோவை சிறையிலிருந்து நாமக்கல்> திருச்சி> தருமபுரி கோர்ட்டுகளில் ஆஜர்படுத்திவிட்டு திரும்பும் வழியில் சேலம் பஸ் நிலையத்தில் கோவைக்கு அடுத்த பஸ்ஸூக்காக கைதியுடன் சின்னச்சாமி> ராஜவேல் என்ற காவலர்கள் காத்துக் கொண்டிருக்கையில் சொகுசுப் பேரூந்தில் தான் வருவேன் என்று கொலைக் கைதி அடம் பிடிக்க காவலர் சின்னச்சாமியை அவனுக்கு துணைக்கு நிருத்திவிட்டு சொகுசுப் பேரூந்தை தேட மற்றொரு காவலர் ராஜவேல் போயுள்ளார்; இதற்கிடையில் தலையில் மூட்டையுடன் வந்த ஒரு ஆசாமி அவர்கள் இருவருக்கு மத்தியில் மூட்டையை இறக்கிவைக்க கண் இமைக்கும் நேரத்தில் எஸ்கேப்பாகி விட்டான் கொலை கைதி சங்கர்.

(கேப்டன் விஜயகாந்த் இந்த தேர்தலில் தோற்றுவிட்டால் அவருக்காக புதியக் கதை தயாராகி விட்டது அந்தக் கொலை கைதி சங்கர் பாத்திரத்தை முஸ்லீமாகவும் இவர் இன்ஸ்பெக்டராகவும் நடிக்கலாம். நம்மை வந்தேறிகளாகவும்> தீவிரவாதிகளாகவும் சித்தரித்துப் பேசிய சங்பரிவார்களை விட சினிமாவில் சித்தரித்துக் காட்டிப் பணம் பண்ணியதில் சினிஃபீல்டில் இவர் முதன்மையானவர் இப்பொழுது முஸ்லீம் வேடம் தரித்து ஓட்டும் கேட்பார் இவர்தான் தீர்க்க முடியாத அதிராம்பட்டிணம் அல்அமீன் பள்ளிவாசல் பிரச்சனையையும் தீர்த்து வைக்கப் போகிறாராம் அவரது மனைவி பிரேமலதா கூறுகிறார் ? ).

கைதியை தப்பவிட்டு வெறுங்கையுடன் திரும்பினால் கோவை கமிஷனர் நையப்புடைப்பார் என்று பயந்த காவலர் சின்னச்சாமி கையிலிருந்த துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டார். 25 வயதை உடைய சின்னச்சாமி பதவி உயர்வு பெறவேண்டும் என்பதற்காக வேலையிலிருந்து கொண்டே மேல்படிப்பை தொடர்ந்து இரவு பகலாக உட்கார்ந்து படிப்பாராம். ஏற்கனவே துடிக்க துடிக்க பல உயிர்களை காவு கொண்ட கொலைகாரன் சங்கர் இன்னுமொரு உயிரையும் தற்கொலை செய்ய வைப்பதற்கு காவல் துறையின் அலச்சியப் போக்கு காரணமாக அமைந்து விட்டது.

கொலை கைதியை சிறையிலிருந்து கோர்ட்டுக்கு கொண்டு செல்லும்பொழுது கைகளுக்கு விலங்கிடுவது பூட்டிய காவல்துறை ஜீப்பில் அழைத்துச் செல்வது போன்ற விதிமுறைகள் கொலை> கற்பழிப்பு> வழிப்பறிப் போன்ற வழக்குகள் பதியப்பட்ட கொடூரமான கைதிக்கு பின்பற்றப்பட வில்லை.

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக பணத்தை மறைத்து எடுத்து செல்வதற்கு காவல்துறை வாகணங்கள் அதிகம் பயன்படுத்தப்படுவதாகவும் பல வாகனங்கள் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டிருப்பதாகவும் தேர்தல் கமிஷனர் கூறி இருப்பதால் கொலை கைதி சங்கரைக் கொண்டு செல்வதற்கு ஒருவேளை வேன் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கலாம் அதனால் சாதாரணப் பேரூந்தில் கொலை கைதியை ஹாயாய அனுப்பி வைத்துள்ளனர் அதனால் அவர் மாயமாகி விட்டார்.

காவலர்கள் தாங்கள் எடுத்துக் கொண்டப் பயிற்சிகளை முஸ்லீம்களிடம் மட்டுமே பிரயோகப்படுத்துவதை லட்சியமாகவும் பெயரைக் கேட்ட உடனேயே து.பயலே> தே.பயலே என்று இகழ்வதை பணியின் ஒரு அங்கமாகவும் ஆக்கிக்கொண்டு செயல்படுகின்றனர். நமக்கும் அரசுப் பணிகளில் முறையான இடஒதுக்கிடு கிடைத்து நாமும் சதவீதத்திற்கு தகுந்தாற்போல் அரசுப் பணிகளில் நுழைந்தால் மட்டுமே சர்வ சமய இந்தியாவில் சமய நல்லிணக்கம் உருவாகும்



 
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும்  வரஹ்...
அழைப்புப் பணியில் அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

கருத்துகள் இல்லை: