திங்கள், ஜூன் 11, 2012

.


ஏகஇறைவனின் திருப்பெயரால்....
 
தலித் முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடாம் ?

புதுடெல்லியில் உள்ள அகில இந்திய ஐக்கிய முஸ்லிம் மோர்ச்சா என்ற முஸ்லீம் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாபா ராம்தேவ் தலித் முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கப் போராடுவேன் என்றுப் பேசி உள்ளார்.

முஸ்லீம்களில் தலித் பிரிவு என்ற ஒன்று கிடையாது என்கின்ற அறிவு கூட இல்லாமல் இல்லாத ஒன்றுக்காக போராடப் போவதாக பேசி இருப்பது காமெடியின் உச்ச கட்டம்.

இஸ்லாத்தில் தலித் என்ற சாதிப் பிரிவு இல்லை என்பதை இவருக்கு உணர்த்தி விட்டாவது இந்திய ஐக்கிய முஸ்லிம் மோர்ச்சா என்ற அமைப்பு இவரை மேடையில் ஏற விட்டிருக்கலாம். ஒரு வேளை அவர்களுக்கும் இது தெரியாதோ என்னவோ ?

இந்த லட்சனத்தில் தான் இன்று ஏராளமான இஸ்லாமிய அமைப்புகள் இந்தியாவில் இயங்குவதால் ஒரு வேளை அவர்களுக்கும் அது தெரியாமல் இருந்திருக்கலாம்.

அவ்வாறு அந்த அமைப்புக்கும், அவருக்கும் இஸ்லாத்தில் சாதிகள் இல்லை என்பது தெரியாமல் இருந்ததென்றால் இப்பொழுது தெரிந்து கொள்ளட்டும் இஸ்லாத்தில் தலித் என்றப் பெயரில் சாதி இல்லை.  

சாதி அடிப்படையில் ஏற்றத் தாழ்வு கற்பித்து இழிவு படுத்தப்படுவதால் தான் தாழ்த்தப்பட்ட தலித் மக்கள் இன இழிவு நீங்க இஸ்லாத்தை நோக்கி வருகின்றனர் என்பதையும் மேலதிகமாகக் கூறிக் கொள்கின்றோம்.

அதனால் எந்த மதத்திலிருந்து யார் இஸ்லாத்திற்குள் வந்தாலும் அவர்களுடைய முந்தைய மதத்தின் சாதிப் பிரிவு இஸ்லாத்தில் தொடருவதில்லை.

தலித் மக்களில் சிலர் விபரம் தெரியாமல் இன இழிவு நீங்க கிருஸ்தவ மதத்திற்கு செல்கின்றனர் கிருஸ்தவ மதத்திற்கு சென்றால் முந்தைய மதத்தின் இழிந்த சாதியில் தான் ருப்பார்கள். 

கடவுளர்கள் மட்டும் தான் மாறுவர் இங்கு மாரியம்மா என்றால் அங்கு மேரி மாதா
, இங்கு விஸ்னு என்றால் அங்கு ஏசுநாதர் ஆனால் சாதியும், தீண்டாமையும், சேரிப் பகுதி குடியிருப்பும் மாறவே மாறாது இதனால் தான் அவர்கள் தலித் கிருஸ்தவர்ள் என்று அழைக்கப்படுகின்றனர். ஒரு வேளை இதை வைத்து அவர் அவ்வாறு கூறி இருக்கலாம்.

இதை வைத்து அவ்வாறுக் கூறுவதாக இருந்தாலும் தலித் கிருஸ்தவர்கள் என்று மட்டும் தான் கூறி இருக்க வேண்டும். தலித் முஸ்லீம்கள் என்று கூறக் கூடாது, கூற முடியாது.

நடைமுறையில் உள்ள சாதிகள்.

முஸ்லீ
ம்களில் நடைமுறையில் உள்ள சாதிகளை இஸ்லாம் பிரித்து வழங்கியதா ? அல்லது முஸ்லீம்கள் விரும்பி ஏற்படுத்திக் கொண்டனரா என்றால் ?  இரண்டும் இல்லை ! 

இந்திய அரசாங்கம் மொத்த மக்களையும் சாதி அடிப்படையில் தான் வழி நடத்துகிறது. இட ஒதுக்கீடு மற்றும் இன்னப் பிற சலுகைகளையும் கூட சாதியின் அடிப்படையில் தான் பிரித்துக் கொடுக்கிறது என்பதால் இன்றியமையாத
கல்விச்சான்றிதழ், அரசு சலுகைகள், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு பெறுவதற்காக இந்திய முஸ்லீம்களிடத்தில் மட்டும் வெறுப்புடன் ஒட்டிக்கொண்டிருக்கிறது சாதி பெயர்கள் என்பதை கூறிக் கொள்கிறோம். 

ஆனாலும் மேல்படி சாதி
ப் பிரிவுகள் ஏற்றத் தாழ்வுகளை கற்பிக்காது தீண்டாமையை வலியுருத்தாது அரசு சலுகைகளின் போது மட்டும் தலை காட்டி விட்டு மறைந்து விடும்.

தலித் தலித் தான்.
ஒரு தலித் எந்த மதத்திற்கு சென்றாலும் தலித் தலித்தாகவே இருப்பதால் அந்த தலித்துகளுடைய சம உரிமைக்காகப் போராடுவேன் என்றும் உணர்ச்சி பொங்கக் கூறி உள்ளார்.

தலித் சகோதரர் அல்லது வேறு யார் இஸ்லாத்திற்குள் வந்தாலும் வந்த உடன் முஸ்லீம்களின் புதிய சகோதரராகி விடுவார் தலித் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய் விடும்.  

முஸ்லீம்களுடன் சம பந்தி உணவும், சம்பந்தி உறவும் தாமதமின்றி உருவாகி விடும் அதனால் தலித் தலித்தாக ஒருக்காலும் இருக்க முடியாது என்பதை தெள்ளத் தெளிவாக தெரிவித்துக் கொள்கிறோம்.

உண்மையில் இவருடைய போராட்டம் தலித் சமுதாய மக்களின் சம உரிமைக்காக இருக்குமென்றால் இந்து மதத்திலிருந்து இன இழிவு நீங்க இது வரை வெளியேறிச் சென்றவர்கள் போக மீதமிருக்கும் தலித்களுடன் சம பந்தி உணவையும், சம்பந்தி உறவையும் ஏற்படுத்திக் கொண்டு தக்க வைத்துக் கொள்ளட்டும்.

இன்னும் இட ஒதுக்கீடு கிடைத்து கஷ்டப்பட்டு படித்து உயரதிகாரிகளான தலித் சகோதரர்கள் பிற உயர்சாதி அதிகாரிகளால் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதை இவர் ஆய்வு செய்யப் புறப்பட்டால் இட ஒதுக்கீட்டை விட இன இழிவை துடைத்தெறிவது தான் முக்கியமெனக் கருதி அனைத்து தலித்களையும் இஸ்லாத்தில் இணைத்து விடாமல் உறங்க மாட்டேன் என்று முழங்கி இருப்பார்.

341ஐ திருத்தாமல் ஓய மாட்டேன்.
இட ஒதுக்கீட்டிற்கான இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 341ல் தலித் முஸ்லீம்களுக்கும், தலித் கிருஸ்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு இல்லாதது கண்டு அதிர்ந்து விட்டதாகவும், அதுவும் மேல்படி சட்டப்பிரிவில் இடஒதுக்கீடு இல்லாதது இப்பொழுது தான் தெரியும் என்றும் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 341ல் தலித் முஸ்லீம்களுக்கும், தலித் கிருஸ்தவர்களுக்கும் தனி இடஒதுக்கீட்டை ஏற்படத்தாமல் ஓய மாட்டேன் என்றும் சூளுரைத்துள்ளார். 

உண்மையில் இவருக்கு இஸ்லாத்திற்கு மதம் மாறிய தலித் மக்களின் மீது கரிசனை இருந்தால் ராஜேந்திர பிரசாத், ரங்கநாத் மிஸ்ரா கமிசன் பரிந்துரை செய்த 10 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல் படுத்தக் கோரி போராட்டத்தை நடத்தட்டும். அவ்வாறு நடத்தினால் இன இழிவு நீங்க இஸ்லாத்திற்கு மதம் மாறிய (அவர் பாணியில் தலித் முஸ்லீம்கள்கள்) பயன் பெறுவர்.

அதுவல்லாமல் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 341ல் தலித் முஸ்லீம்களுக்கு தனி இட ஒதுக்கீடு ஏற்படுத்தி அவர்களை தனிமைப் படுத்தி விட்டால் அல்லது இஸ்லாத்திற்கு சென்றதால் தான் இடஒதுக்கீட்டை இழந்தீர்கள் என்பதை நாசூக்காக கூறி விட்டால் மீண்டும் இந்து மதத்திற்கு திரும்புவதற்கு வாய்ப்பாக அமைந்து விடலாம் என்ற அடிப்படையில் இந்த உரை அமைந்திருந்தால் அவர் நினைவில் வைத்துக் கொள்ளட்டும் இதுவும் நடக்காது, அதுவும் நடக்காது..  

மூவாயிரம் முஸ்லீம்கள்.
என்னுடைய ஆசிரமத்தில் மூவாயிரம் முஸ்லீம்கள் இருக்கின்றனர் அவர்களிடத்தில் பாகுபாடு பார்ப்பதில்லை என்றும் கூறி உள்ளார் அனால் எத்தனை ஆயிரம் தலித்கள் உள்ளனர் என்பதை கூற வில்லை. (வந்தாலும் சேர்க்க மாட்டார்கள் என்பது தனி விஷயம்).

இதன் மூலம் இன்னும் சாருக் கான்
, சல்மான் கான் போன்ற பெயர் தாங்கி கோடீஸ்வர முஸ்லீம்களை தன்னுடைய ஆசிரமத்திற்கு இழுப்பதும், சமத்துவத்திற்காக இஸ்லாத்திற்கு செல்லும் தலித்களை தடுத்து நிருதத்துவதும் தான் இவரது பேச்சின் நோக்கம் என்பதை மக்கள் விளங்கிக் கொண்டனர்.

இந்நிலைத் தொடருமெனில் இவரையும், அண்ணா ஹசாரேவையும் கொம்பு சீவி களமிறக்கி விட்ட பி.ஜே.பீ இவர்களால் அதிகம் இழக்க வேண்டியது வரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவர் தன்னுடைய ஆசிரமத்தில் உள்ள முஸ்லீம்களிடம் பாகுபாடு காட்டப்படுவதில்லை என்று பீற்றிக் கொள்கிறார் மொத்த உலகுக்கும் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னரே அனைத்து மனிதர்களுக்கு மத்தியிலும் பாகுபாடு இல்லை என்று முழங்கி விட்டது இஸ்லாம்.

எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான். புகாரி, முஸ்லீம்.


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன்-3:104.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக