ஞாயிறு, அக்டோபர் 30, 2011

உல்லாச பங்களா பாலர் பள்ளியாக மாறியது.


ஏகஇறைவனின் திருப்பெயரால்...


ஊழல் பணத்தில் உருவான உல்லாச பங்களா பாலர் பள்ளியாக மாறியது. நிதிஷ்குமார் அதரடி நடிவடிக்கை


பீகார் மாநிலத்தில் சிறுபாசனத்துறை செயலாளராகப் பணியாற்றிய சிவங்கர் வர்மா என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது கடந்த 2007ல் அளிக்கப்பட்ட ஊழல் புகாரின் அடிப்படையில் அவரது வீட்டை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை இட்டபொழுது 9 கிலோ தங்கம், 1600 அமெரிக்கன் டாலர் மற்றும் சில சொத்துக்களின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன அதன் மதிப்பு மட்டும் சுமார் 1.43 கோடி ரூபாயாகும்.

வருமாணத்திற்கு மீறி சொத்து சேர்த்துள்ள அரசு அதிகாரிகளின் ஊழல் புகார் நிலுவையில் இருக்கும்பொழுதே அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய அரசுக்கு அதிகாரம் வழங்கி தீர்ப்பளித்தது 2009ல் நிறுவப்பட்ட லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றங்கள்.

ஆனாலும் அது அப்பொழுது செயல் வடிவத்திற்கு கொண்டுவரப்படவில்லை கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது சிறப்பு நீதிமன்றங்களின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தி ஊழல் அதிகாரிகளின் சொத்துகளை பறிமுதல் செய்து அரசு கஜானாவில் சேர்க்கப்படும் என்றும் கட்டடங்களை அரசு பள்ளிக்கூடங்களுக்கு ஒதுக்கப்படும் என்றும் நிதிஷ்குமார் வாக்குறுதி அளித்திருந்தார்.  
தேர்தல் பிரச்சாரத்தில் செய்கின்ற வாக்குறுதிகளில் அதிகமானவை தேர்தலில் வெற்றி பெற்றப் பின் சொன்னது காற்றோடுப்போயச்சு என்று விட்டு விடும் இந்த காலகட்டத்தில் நிதிஷ்குமார் வாக்குறுதியை நிறைவேற்ற நடிவடிக்கையில் இறங்கினார் முதல் நவடிக்கையாக சிவசங்கர் வர்மாவின் பெயரில் பாட்னா பெய்லி சாலையில் உள்ள மூன்று அடுக்கு மாடி சொகுசு பங்களாவை பறிமுதல் செய்து அடிப்படை சுகாதார வசதியற்ற குடிசைப் பள்ளிகளில் படித்து வந்த தலித் மாணவர்களுக்கு ஒதுக்கினார். இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் சிவங்கர் வர்மா தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து அரசு எடுத்த நடிவடிக்கை சரியானது தான் என்றுத் தீர்ப்பளித்தது.

இதேப்போன்று இன்னும் 16 ஊழல் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அவைகளையும் கூடிய விரைவில் அரசு பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் என்றும் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் இருக்கக் கூடாத இடத்தில் (பி.ஜே.பி.யில்) இருக்கும் சிறந்த மனிதர் என்று வாஜ்பேயை பாஷிச சிந்தனையாளர்கள் போற்றிப் புகழ்ந்தனர் அவர் இருக்க வேண்டிய சரியான இடத்தில் தான் இருந்தார் என்பதை அவர் பதவியை விட்டு இறங்குவற்கு முன் பி.ஜே.பி.யில் மேல்மட்டத் தலைவர்கள் முதல் அடிமட்டத் தொண்டர்கள் வரை லஞ்சம் மற்றும் இன்னப் பிற குற்றச் செயல்களில்  சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்துக் காட்டி விட்டு இறங்கினார்.

ஆனால் பி.ஜே.பியில் இருக்கக் கூடாத மனிதர் என்று நிதிஷ்குமாரைக் கூறினால் மிகையாகாது காரணம் பாரபட்சமற்ற நிர்வாகம் செய்வதில் இவர் ஓரளவு சிறந்த நிர்வாகி என்பதற்கு சான்றாக சிவசங்கர் வர்மாவிடமிருந்து கைப்பற்றிய உல்லாச பங்களாவை தாழ்த்தப்பட்ட தலித் மாணவர்களுக்கு ஒதுக்கியது, வருண்காந்தியின் மதவெறி உளறல்களை பீகாரில் தடைசெய்தது போன்றவைகளாகும். 


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

கருத்துகள் இல்லை: