ஞாயிறு, அக்டோபர் 30, 2011

வக்ஃப் வாரியத்தின் புதிய கட்டடம்


அல்லாஹ்வின் திருப்பெயரால்....

சென்னை பாரிமுனை ஜாபர் சராங் தெருவில் தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு ஒரு கோடியே இருபது லட்சம் செலவில் புதிதாக கட்டம் கட்டப்பட்டு முதல்வர் கருனாநிதி திறந்து வைத்தார் அதில் தமிழக அமைச்சர்கள் ஹாருன் உட்பட பலர் கலந்து கொண்டனர். வக்பு வாரியத் தலைவர் ஹைதர் அலி கூறியதாவது தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்கள்> தர்ஹாக்கள்> மதரசாக்கள் உள்ளிட்ட ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட வக்புகளை நிர்வகிக்கும் அரசு சார்பு அலுவலகம் இது இத்தனை வருடங்களாக வாடகை கட்டடத்தில் இயங்கி வந்தது தற்போது தான் சொந்த கட்டத்தில் இயங்க ஆரம்பித்து உள்ளது என்றும்> வக்பு வாரியத்தின் பெரும்பாலான சொத்தக்கள் எம்.எல்.ஏக்கள்> எம்.பிக்கள்> திருச்சி பெல் நிருவனம்> பாரதிதாசன் பல்பலைகழகம் உள்ளிட்ட பலர் ஆக்ரமித்துள்ளனர் கூடிய விரைவில் மீட்க நடிவடிக்கை எடுக்கப்படும் என்றுப் பேசினார். தினகரன்.




அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

இதற்காக தமிழக அரசுக்கு முதற் கண் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

கேட்பதற்கு நாதியற்ற நிலையில் கிடந்த வக்பு சொத்துக்களை சுருட்டிக் கொண்டவர்களிடமிருந்து மீட்டெடுக்கவும்> அதைப் பராமரிப்பதற்கு ஒரு அட்மினிஸ்ட்ரேஷனை ஏற்படுத்தி செயல்படுவதற்கு  மேல்படி அலுவலகம் உதவியாக அமையும்.

தமுமுகவின் பொதுச் செயலாளர் ஹைதர் அலி சாப் அவர்கள் !
வக்பு வாரியத்தின் பெரும்பாலான சொத்தக்கள் எம்.எல்.ஏக்கள்> எம்.பிக்கள்> திருச்சி பெல் நிருவனம்> பாரதிதாசன் பல்பலைகழகம் உள்ளிட்ட பலர் ஆக்ரமித்துள்ளதாகவும் கூடிய விரைவில் மீட்க நடிவடிக்கை எடுக்கப்படும் என்று தாங்கள் பேசியது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கருனாநிதி அருகில் இருந்தார் என்பதற்காக திருச்சி அண்ணா அறிவாலயம் வக்பு நிலத்தில் கட்டப்பட்டிருப்பதை சொல்வதற்கு தயங்கியது ஏன் ? ஒரு வேளை அதற்கு பகரமாகத் தான் இதை கட்டிக் கொடுத்திருப்பாரா ? உங்களுக்கும் அவருக்கும் இடையில் என்;ன ஒப்பந்தம் என்றுத் தெரியவில்லை ? நீங்கள் அதை மட்டும் சொல்லாமல் விட்டதன் காரணம் புரியவில்லை ?

எது என்னவோ ? தாங்கள் குறிப்பிட்ட எம்.எல்.ஏக்கள்> எம்.பிக்கள்> திருச்சி பெல் நிருவனம்> பாரதிதாசன் பல்பலைகழகம் உள்ளிட்ட இடங்களில் முறைகேடாக சுருட்டிக் கொள்ளப்பட்ட வக்பு சொத்துக்களை மீட்பதற்கு முன் தங்களால் சில செல்வந்தர்களுக்கு முறைகேடாக தாரை வார்க்கப்பட்ட வக்பு சொத்துக்களையும் அவர்களிடம் எடுத்துக் கூறி திரும்பப் பெற்று வக்பில் சேர்த்து விடுங்கள். 

உலகில் நிலவும் தீமைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தங்கள் குடும்பத்தாரிலிருந்தேத் தொடங்கினார்கள்.

வட்டியை ஒழிப்பதற்காக தங்களுடைய சிறிய தந்தை அப்பாஸ்(ரலி) அவர்களுடைய வட்டி பாக்கியை அன்றைய தினத்திலிருந்து தள்ளுபடி n;சய்து மக்களிடம் புழக்கத்தில் இருந்த வட்டித் தொழிலை (தீமையை ) முடிவுக்கு கொண்டு வந்தார்கள்.

கொலைக்குக் கொலை என்று பழி தீர்ப்பதற்காக இரத்த ஆறை ஓட்டச்செய்த தீமையை தங்களது சிறிய தந்தை ஹம்ஸா (ரலி) அவர்களுடைய கொலைக்கான பழியை இன்று முதல் விட்டு விடுகிறேன் என்றுக் கூறி இத்துடன் மக்களையும் விட்டு விடும்படி கூறினார்கள்.

மனிதன் தவறிழைக்கக் கூடியவன் தான் தவறு என்று உணர்ந்தப் பிறகு தவறிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்பவனே சிறந்த மனிதன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
எம்.எல்.ஏக்கள்> எம்.பிக்கள்> திருச்சி பெல் நிருவனம்> பாரதிதாசன் பல்பலைகழகம் உள்ளிடடோர்  சூறையாடப்பட்ட வக்பு சொத்துக்களை மீட்பதற்கு முன் இதோ எங்களால் முறைகேடாக இன்ன இன்ன செல்வந்தர்களுக்கு இன்ன இன்ன இடத்து வக்பு சொத்துக்கள் தாரை வார்க்கப்பட்தை திரும்ப ஒப்படைத்து விடுகிறோம்.

எங்களை மன்மாதிரியாக்கிக் கொண்டு உங்களில் முறைகேடாக வளைத்துக் கொண்ட வக்பு சொத்துக்களை திரும்ப ஒப்படைத்து விடுங்கள் என்ற அறிவிப்பை பகிரங்கமாக அறிவித்து விடுவீர்களானால் அவர்களால் முறைகேடாக சுருட்டிக் கொள்ளப்பட்ட வக்பு சொத்துக்கள் தாமாக வந்து விடும்.

இல்லை என்றால் உங்கள் வீர உரை அரசியல் வாதிகளுக்கு முன்பு பேசுவதற்காக தயாரிக்கப்பட்டவை தான் செயல் வடிவத்திற்காக அல்ல தனக்கு ஒரு சட்டம் அடுத்தவனுக்கு ஒரு சட்டமா என்ற முடிவுக்கு சுருட்டல் பேர்வழிகள் வந்து விடுவார்கள்.

தங்களால் முறைகேடாக பிறருக்கு தாரை வார்க்க்பட்ட ஏராளமான வக்பு சொத்துகள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துடைய ஆதாராப் பூர்வ செய்தி மடலில் (உணர்வில்) வெளியான குற்றச்சாட்டுகளாகும் பார்க்க உணர்வு உரிமை: 12> குரல்: 26

வக்பு நிலங்களை அபகரித்துக் கொண்டவர்களுக்கும்> அதற்கு துணையாக இருந்தவர்களுக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எச்சரிக்கை

எனக்கும் வேறு சிலருக்கும் இடையே ஒரு நிலம் சம்பந்தமான தகராறு இருந்து வந்தது. அதை நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் கூறினேன். அவர்கள் சொன்னார்கள்; அபூ ஸலமாவே! (பிறரின்) நிலத்தை (எடுத்துக் கொள்வதைத்) தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் 'ஓர் அங்குலம் அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறவரின் கழுத்தில் ஏழு நிலங்கள் மாலையாக (மறுமையில்) கட்டித் தொங்க விடப்படும்'' என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூ ஸலமா(ரலி) நூல்: புகாரி 2453.

பிறர் நிலத்திலிருந்து ஒரு பகுதியைத் தனக்கு உரிமையின்றி எடுத்துக் கொண்டவன் மறுமை நாளில் ஏழு பூமிகளுக்குக் கீழே அழுந்திப் போய் விடுவான். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரலி) நூல்: புகாரி 2454.


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

கருத்துகள் இல்லை: