ஞாயிறு, அக்டோபர் 30, 2011

ஸ்டார்ட்டர் இல்லாத டியூப்லைட்


ஏகஇறைவனின் திருப்பெயரால்...
ஸ்டார்ட்டர் இல்லாத டியூப்லைட்


இந்திய யூனியன் முஸ்லீம்லீக் மாநில மாநாட்டில் கலைஞரின் உச்சிக் குளிரும் விதமாக ''நல்லிணக்க நாயகர்'' எனும் பட்டத்தை சூட்டி இன்னும் நாற்பது வருடங்கள் வாழ்ந்து தொடர்ந்து தமிழகத்தின் அசைக்க முடியாத முதல்வராக கோலோச்சுங்கள் என்று பேராசிரியர் காதர் மொய்தீன் அவர்கள் நல்லாசி வழங்கினாராம்

தள்ளாத வயதுக்கு தள்ளிவிடாதே இறைவா ! என்று பெருமானார் (ஸல்)அவர்கள் தொழுகையில் பிரார்த்தித்து நம்மையும் பிரார்த்திக்கச் சொன்னார்கள். பேராசிரியர் அவர்களுக்கு இந்த நபிமொழி மறந்திருக்கலாம் அல்லது தெரியாமல் இருக்கலாம். 

பேராசிரியர் காதர்மொய்தீன் அவர்கள் லேட்டாக எரியும் ஸ்டார்ட்டர் இல்லாத டியூப்லைட் என்பதை புரிந்துகொண்ட கலைஞர் இதை சாபக்கேடு என்றுக் கூறி நொந்து கொண்டாராம். 
காலில் விழுவதையும்> கூழைக்கும்பிடுப் போடுவதையும்> ஆரூடம் கூறுவதையும்> ஆசிவழங்குவதையும்> ஆசிபெறுவதையும் வழமையாகக் கொண்டவர் பேராசிரியர் காதர்மொய்தீன் என்பதால் பழக்க தோஷத்தால் நல்லாசி வழங்க இப்பொழுதே தவழும் நிலையில் தள்ளாடும் கலைஞர் இன்னும் நாற்பது வருடம் என்றதும் ஏன்டா இந்த விழாவுக்கு வந்தோம் என்று ஆகி விட்டதாம் ?  

இது பேராசிரியரிடம் குடிகொண்டுள்ள அஞ்ஞானப் பழக்கம் அவர் இப்படித்தான் பேசுவார் என்பதை நாம் அறிந்திருப்பதால் அதை விட்டு விடுவோம் திருந்த நினைக்கும் பொழுது திருந்திக் கொள்ளட்டும். 

ஆனால் அவருக்கு ''நாணிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்'' எனும் பட்டத்தை எதனடிப்படையில் சூட்டி மகிழ்ந்தார் என்பது தான் நமது கேள்வி ?

நாமும் பூதக் கண்ணாடியை மாட்டிக் கொண்டு கடந்த கலைஞரின் அரை நூற்றாண்டு அரசியல் வரலாற்றில்  தேடித் துலாவிய வகையில் ஹிந்து முஸ்லீம்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியதாக ஒரு சம்பவத்தையும் கூட பார்க்க முடியவில்லை> மாறாக பல தருணங்களில் வெறுப்புணர்வை விதைத்த சம்பவங்களே மலிந்து கிடக்கிறது. அதை எல்லாம் பட்டியலிட்டால் இந்த பத்திரிகையின் பக்கங்கள் போதாது என்பதால் மிகவும் சமீபத்தில் நிகழ்ந்த பாபர் மஸ்ஜித் தீர்ப்பை அவர் வறவேற்ற விதம் அவர் நல்லிணக்க நாயகர் எனும் பட்டத்திற்கு அறவேத் தகுதி இல்லாதவர் என்பதற்கு உதாரணமாகும்.

முஸ்லீம் மன்னர் பாபரால் கட்டப்பட்டு 1949 க்கு முன்னர் நான்கு நூற்றாண்டுகள் முஸ்லீம்களின் பாத்தியத்தில் இருந்த சொத்து பாபர் மஸ்ஜித். 1949ல் பூட்டப்படுவதற்கு முன்பு வரை அதில் தொழுகை நடத்தப்பட்டுள்ளது. 1949ல் பூட்டப்பட்ட பள்ளிவாசல் 1992ல் மதவெறி கும்பலால் இடிக்கப்பட்டது. அவரின் பிறப்பிற்கு முந்தைய வரலாறுகளை எல்லாம் நன்கு படித்தறிந்தவர் ஆனால் அவர் வாழும் காலத்தில் நடந்த இந்த சம்பவம் அவருக்குத் தெரியாமலா இருக்கும்

மீண்டும் கட்டித்தர வில்லை என்றாலும் பரவாஇல்லை நிலத்தையாவது மீட்டுத்தரும்படி இந்திய நீதித்துறையின் மீது நம்பிக்கைவைத்து நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்து காத்திருந்த முஸ்லீம்களுக்கு இந்திய அரசியல் சாசன சட்டப்படி நீதி வழங்க வேண்டிய நீதிபதிகளே பள்ளிவாசலை இடித்த கயவர்களுக்கு மூன்றில் இரண்டை பிரித்துக் கொடுத்து துரோகம் செய்தனர்.

தீர்ப்பு என்றப் பெயரில் கட்டப் பஞ்சாயத்து செய்து இடித்தவர்களுக்கே பிரித்துக் கொடுத்ததைக் கேட்டு  அவரது இதயத்தில் குடி வைத்திருந்த முஸ்லீம்களின் இதயம் கிழிக்கப்பட்டு இரத்தம் ஓடிக் கொண்டிருந்தது.

நீதிபதிகளே கட்டப்பஞ்சாயத்து செய்த கயமைத்தனத்தைக் கண்டு இந்திய தேசத்தின் தன்மானத்தின் மீது பற்றுடைய நடுநிலையான ஹிந்துக்கள் கொதித்தெழுந்து பலர் கண்டன அறிக்கைகள் விட்டுக் கொண்டிருந்த பொழுது ஆஹா இதுவல்லவா தீர்ப்பு !! இதுவல்லவா ஞாயம் !! இதை வரவேற்கிறேன், அகமகிழ்கிறேன் என்றுக் கூறி முஸ்லீம்களின் கிழிக்கப்பட்ட இதயத்தில் இவர் மேலும் ஒரு கத்தியை சொறுகினாரே ? அதற்காக இந்த ''நல்லிணக்க நாயகர்'' என்ற சிறப்புப் பட்டமா ? எதற்காக வழங்கப்பட்டது ? நல்லிணக்க நாயகர் என்ற பட்டத்தைச் சூட்டி மகிழ ஹிந்து முஸ்லீம்கள் மத்தியில் நல்லிணக்கம் ஏற்படுவதற்காக எப்பொழுது ? எதைச் செய்தார் ? எதாவது ஒரு நல்லுதாரணத்தை இவர்கள் கூற வேண்டும் ? என்பதை உலகம் முழுவதும் வாழும் தமிழ் கூறும் முஸ்லீம்கள் பேராசிரியர் காதர் மொய்தீனிடமும், ஒவ்வொரு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உறுப்பினர்களிடமும் கேட்டுக்கொள்கின்றனர். 

பதில் சொல்வார்களா ? பொறுத்திருந்துப் பார்ப்போம் !


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்



கருத்துகள் இல்லை: