ஞாயிறு, அக்டோபர் 30, 2011

லட்டும், பிரசாதமும்


ஏகஇறைவனின் திருப்பெயரால். ....

லட்டும், பிரசாதமும்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

இன்று ஜி2 ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு லஞ்சம் கணக்கிட முடியாத தொகை என்பதால் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது அதிலும் தேர்தல் மிகவும் நெருங்கி விட்டதால் எதிர்கட்சிகளும் விடாமல் விரட்டிக் கொண்டிருக்கிறது இவ்வாறு விரட்டும் எதிர்கட்சிகள் முக்கியமாக பிஜேபி காரர்கள் ஒன்றும் லஞ்சத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல, அவர்கள் காலத்து லஞ்சம் இதைவிட சிறிதுக் குறைவாக இருக்கலாம் ? அல்லது இதைவிடக் கூடுதலாகவும் இருக்கலாம் ஸ்பெக்ட்ரம் போல் வெளிச்சத்திற்கு வராமல் கும்மிருட்டுக்குள் கை மாறி இருக்கலாம்.

காரணம் இவர்களின் ஆட்சியில் தான் லஞ்சம் வீடு முதல் (சுடு) காடு வரை பறந்து விரிந்தது. ஆனாலும் அதன் லஞ்சத் தொகை கணக்கிடும் எல்லைக்குள் இருந்தது, கலைஞரின் அன்பு ராசா எல்லையை உடைத்து சாதனைப் படைத்து விட்டார்.

பாராளுமன்றத்தை இவர்கள் செயல்படாமல் ஸ்தம்பிக்கச் செய்வதால் அரசுக்கு ஏற்படும் இழப்பு ஸ்பெக்ட்ரம் ஊழல் இழப்பைத் தாண்டும் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது.   

இது ஒரு புறமிருக்க சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரியாக பணியாற்றிய ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவி இந்திரசிங் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் செய்த குற்றமும் ஏறத்தாழ ஸ்பெக்ட்ரம் மேட்டரை ஒத்தது தான். ஆனால் இது ஊடகங்களால் ஊதிப் பெரிதாக்கப்படாதது தான் ஆச்சரியமாக உள்ளது.

இவர் ஒரு தனியார் தொலைதொடர்பு நிருவனத்திற்கு பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்களை அவ்வப்பொழுது அளித்து வந்திருக்கிறார் ஒவ்வொரு முறையும் கோடிக்கணக்கில் பணத்தையும், உல்லாசத்திற்கு வெளிநாட்டுப் பெண்களையும் கேட்டுப் பெற்றிருக்கிறார்.

இதற்கான இடைத்தரகரிடம் முக்கியமான ரகசியத் தகவலை கொடுப்பதாக இருந்தால் முன்கூட்டியே அவருடன் தொலைபேசியில் பிரசாதம் அனுப்புங்கள் என்றுக் கூறி விட்டு இத்தனை கோடி ரூபாய் என்பதை வேறொரு செல்போன் மூலம் மெஸேஜ் அனுப்பி விடுவாராம்.

முக்கியத்துவம் வாய்ந்த அடுத்த ரகசிய தகவல்கள் கொடுப்பதாக இருந்தால் மேற்படி இடைதரகரிடம் முன்கூட்டியே தொலைபேசியில் ''லட்டு'' அனுப்புங்கள் என்றுக் கூறிவிட்டு எந்த நாட்டுப்பெண்கள் வேண்டும் என்பதை வேறாரு செல்போன் மூலம் மெஸேஜ் அனுப்பி விடுவாராம் ?

பெண்கள் தேவை என்றால் லட்டு என்றும், பணம் தேவை என்றால் பிரசாதம் என்றும் பல வருடங்களாக அரசின் ரகசிய ஆவணங்களை விலைபேசி விற்றுக் கொண்டிருந்தவருக்கு இடைத்தரகராக செயல்பட்ட கொல்கத்தாவைச் சேர்ந்தவர் போலீஸாரின் வேறொரு தேடுதலில் சிக்கிக்கொண்டதும், அவரிடம் இருந்த செல்பொன்களை சோதனை இட்டபொழுது மேல்படி லட்டு, பிரசாதம் என்ற சங்கேத உரையாடல்கள் மற்றும், மெஸேஜ்கள் எடுக்கப்பட்டு அரசின் முக்கிய கேந்திரமாகிய உள்துறையில் பணியாற்றிய ரவி இந்திர சிங் என்ற பலே கில்லாடி கைது செய்யப்ட்டு சிறை கம்பிகளை எண்ணிக்கொண்டிருப்பதாக டெல்லி போலீஸார் கூறுகின்றனர்.

இதுபோன்ற முக்கிய கேந்திரங்களுக்காக தேர்வு செய்யப்படுபவர்கள் மிகவும் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாகப் பார்த்தே தேர்வு செய்யப்படுவார்கள் அந்த நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் யார் என்றால் ? முஸ்லீம்களாக இருக்கக் கூடாது அவ்வளவு தான்

மதவெறியும், சாதி வெறியும் இயற்கை வளம் கொழிக்கும் இந்திய ஆட்சியாளர்களை ஆட்டிப் படைக்கும் வரை நாட்டின் ரகசிய ஆவனங்கள் லட்டும், பிரசாதமுமாக கை மாறிக்கொண்டே சென்று வளர்ச்சிப் பாதையில் செல்லும் இந்தியாவை வீழ்ச்சிப்பாதைக்கு மாற்றி விடும் காலத்திற்கு தூரம் அதிகமில்லை.  


 
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும்  வரஹ்...
அழைப்புப் பணியில் அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

கருத்துகள் இல்லை: