ஞாயிறு, அக்டோபர் 30, 2011

சிந்திப்பார்களா ?

ஏகஇறைவனின் திருப்பெயரால்...


சிந்திப்பார்களா ?

பதவியை விரும்புபவர்களிடத்தில் பதவியைக் கொடுக்காதீர்கள் பதவியை வெறுப்பவர்களிடம் பதவியைக் கொடுங்கள் என்று பெருமானார்(ஸல்)அவர்கள் கூறினார்கள். நபிமொழி.

பதவிக்காகவே அல்லாஹ்வின் மீது செய்த சத்தியத்தை துச்சமென தூக்கி எறிந்து விட்டு அரசியல் களம் கண்டவர்கள் தான் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் குரூப் என்பதற்கு அவர்களின் செயல்பாடுகள் சான்றாக அமைந்து வருவதைக் காணலாம்.

ஏகத்துவ கொள்கையை அறியாத மாற்று மதத்தவர்கள் கூட தங்களுக்கு பொண்ணாடை அல்லது சால்வை போர்த்த வரும் பொழுது கைகைளை நீட்டி வாங்கி ஒரு ஓரமாக வைத்து விடுவார்கள் பெருமையை விரும்ப மாட்டார்கள். இது நம் கண் முன் எத்தனையோ சம்பவங்களைப் பார்த்திருக்கிறோம்.

சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் சமீபத்தில் கீழக்கரை உஸ்வத்துல்  ஹஸனா சங்க நிர்வாகிகளை சந்திக்க வந்திருந்த பொழுது உஸ்வத்துல்  ஹஸனா சங்க நிர்வாகிகள் அவருக்கு சால்வை அணிந்து வரவேற்ற பொழுது ஒரு ஃபார்மாலிட்டிக்காகக் கூட சால்வா போர்த்த வேண்டாம் என்றும் கூறவில்லை குறைந்தது தனது கைகைளால் வாங்கி ஒரு ஓரமாக வைக்கவும் கூட இல்லையாம் முழுவதுமாக போர்த்தி விடும் வரை போட்டோ எடுத்து முடிக்கும் வரை கைகளை தொங்க விட்டு நின்று கொண்டிருந்தது சால்வை போர்த்தி விட்டவர்களே சங்கடத்தால் நெளிந்தார்களாம் ???

கடந்த பாராளுமன்ற> சட்டமன்ற தேர்தலுக்காக வாக்கு சேகரிக்க செல்லுமிடங்களிலெல்லாம் இவர்கள் அவர்களுக்கும்> அவர்கள் இவர்களுக்குமாக சால்வை போர்த்திக் கொண்டதற்கு அவர்கள் வேறொரு கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்கள் என்ற பதிலைக் கூறினர்.
 
கீழக்கரை உஸ்வத்துல் ஹஸனா சங்க நிர்வாகிகளும் ஜவாஹிருல்லாஹ்வும் எந்த கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்கள் (?) இந்த புகழ் விரும்பிகளுக்கு பதவி வெறியர்களுக்கு வாக்களித்த மக்கள் சிந்திப்பார்களா ?
உணர்வுக்கு எழுதியக் கட்டுரை



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

கருத்துகள் இல்லை: