திங்கள், அக்டோபர் 31, 2011

நான்கே மாதங்களில் சட்டம் ஒழுங்கு சீர் செய்யப்பட்டுள்ளதாம் ???


ஏகஇறைவனின் திருப்பெயரால்...

நான்கே மாதங்களில் சட்டம் ஒழுங்கு சீர் செய்யப்பட்டுள்ளதாம் ???
ஜெயலலிதா சொல்கிறார் !!!
தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அக்டோபர் 9 அன்று திருச்சி மேற்கு தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபடும் பொழுது மக்கள் நலப் பணிகளை முடுக்கி விட்டு சட்டம் ஒழுங்கை சிர் செய்து தமிழகத்தை நான்கே மாதங்;களில் அமைதிப் பூங்காகாவாக மாற்றி அமைத்திருப்பதாகக் கூறி உள்ளார். 

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தைப் பற்றி எழுதிய இனவெறி, மதவெறிப் பிடித்த தினமலர் முஸ்லீம்களை விஷமிகள் என்று எழுதி மதக்கலவரத்தைத் தூண்டி விட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சி செய்ததை கண்டிக்கத் திராணியற்ற ஜெயலலிதா சட்டம் ஒழுங்கை சீர் செய்ததாகக் கூறுவது வேடிக்கையாக இல்லையா ?

கடந்த வருடத்தை விட இந்த வருடம் விநாயர் சதுர்த்தி ஊர்வலம் பல இடங்களில் கலாட்டாவில் முடிந்துள்ளது முஸ்லீம்கள் அதை எதிர்க்காமல் அமைதி காத்ததால் பெரிய கலவரமாக மாறவில்லை அதனால் இன்று இவரால் சட்டம் ஒழுங்கை சிர் செய்து அமைதிப் பூங்காகாவாக மாற்றியதாகக் கூற முடிகிறது.

திருச்சியில் இன்று எந்தத் தொகுதியில் யாருக்காக பிரச்சாரம் செய்கிறாரோ அந்தத் தொகுதி முஸ்லீம் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் நின்று வெற்றிப் பெற்று அமைச்சரானத் தொகுதி அதை மீண்டும் ஒரு முஸ்லீமுக்கே ஒதுக்கி அவரை அமைச்சராக்குவோம் என்ற சிந்தனை இல்லாதவர் மக்கள் நலப் பணிகளைப் பற்றியும், சட்டம் ஒழங்கைப் பற்றியும், பேசலாமா ?

நான்கரை ஏக்கர் நிலப்பரப்பில் அமையப் பெற்ற சென்னை திமுக அலுவலகம் பெண்ணலூர் ஜமீனுக்கு சொந்தமானது அதை 1972ன் கூடுதல் நிலம் கையகப்டுத்தும் நிலஉச்சவரம்பு சட்டத்தைக் காரணம் காட்டி ஜமீன் குடும்பத்தாரிடமிருந்து கையகப்படுத்துவதற்கு திட்டம் தீட்டி ஜமீன் குடும்பத்தைச் சாராத சுப்புராம நாயுடுவிடம் மட்டும் கையெழுத்துப் பெற்று அபகரிக்கப்பட்டு தலைமை அலுவலத்தை கருனாநிதிக் கட்டி உள்ளார் என்றும் அதேப் போல திருச்சியில் அமையப்பெற்றுள்ள திமுக அலுவலகமும் வக்ஃபு வாரிய நிலத்தை அபகரித்து கட்டப்பட்டது தான் என்றும் ஜெயலலிதா கூறி உள்ளார். இந்தளவுக்குத் தௌ;ளத் தெளிவாகத் தெரிந்திருந்தும் அதை மீட்டு வக்ஃபு வாரியத்திடம் ஒப்படைக்க வக்கில்லாதவர் மக்கள் நலப்பணிகளை மேம்படுத்தி இருப்பதாக சொல்லலாமா ?

இதற்கு பதிலளித்த கலைஞர் ஜமீன் குடும்பத்தை சேர்ந்த பத்துப் பேரிடம் முறையாக கையெழுத்து பெற்றே நிலம் வாங்க்ப்பட்டது என்ற விளக்கமளித்து விட்டு கடந்த நான்கு மாதத்தில் மட்டும் 154 கொலை, 165 கொள்ளை, 102 செயின் பறிப்,பு 27 வழிப்பறி நடந்துள்ளதாக புள்ளி விபரத்துடன்  சுட்டிக்காட்டி தமிழகம் இன்னும் அமைதிப் பூங்காவாக மாறவில்லை அமலிக்காடாகத் தான் இருக்கிறது என்றுக் கூறியவர் திருச்சி அறிவாலயம் பற்றி அறவே வாய் திறக்கவில்லை.

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் கட்டப்பட்டுள்ள கலைஞர் அறிவாலயத்தில் தனக்கு சொந்தமான 13 ஆயிரம் சதுரடி நிலம் அபகரிக்கப்பட்டுள்;ளதாக துறையூரைச் சேர்ந்த டாக்டர் சீவாசன் திருச்சி மாவட்ட நில அபகரிப்பு அதிகாரிகளிடம் புகார் அளித்திருந்தார்.

அதே அதிகாரிகளிடம் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் கட்டப்பட்டுள்ள கலைஞர் அறிவாலயத்தின்  மொத்த நிலமும் வகஃ;பு வாரியத்தைச் சேர்ந்தது என்றும் அதை மீட்டுத் தரும்படி தமிழ்நாடு வக்பு வாரியமும் கே.என். உட்பட பதினைந்து பேர் மீது புகார் செய்திருந்தது.

சொத்துக்கான ஆவணங்களைப் பார்வையிட்ட அதிகாரிகள் அவைகள் சரியாக இருப்பதை அறிந்து மேலிடத்திற்கு தகவல் அனுப்பி கைது உத்தரைவப் பெற்று கே.என். நேருவை கைது செய்துள்ளனர் ஆனால் அவரைக கைது செய்யும்பொழுது துறையூர் டாக்டர் சீனிவாசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்வதாகக் கூறி உள்ளனர். 

தமிழ்நாடு வக்ஃபு வாரியம் அளித்த புகாரை குப்பைத் தொட்டியில் வீசி விட்டனர் மேல்படி நிலத்தை மீட்டு வக்ஃபு வாரியத்திடம் ஒப்படைப்பதற்கான சாத்தியக் கூறுகள் நிறைய இருந்தும் அதை மீட்டு வக்ஃபு வாரியத்திடம் ஒப்படைக்க எவ்வித நடிவடிக்கையும் எடுக்காமல் திமுக பிரமுகர்களை கைது செய்து உள்ளேத் தள்ளுவதிலேயே குறியாக செயல்பட்டார் ஜெயலலிதா.

இன்று மக்கள் நலப் பணிகளை முடுக்கி விட்டு சட்டம் ஒழுங்கை சீர்செய்து தமிழகத்தை நான்கே மாதங்;களில் அமைதிப் பூங்காகவாக மாற்றியதாகக் கூறுவது நகைப்புக்கிடமாக இல்லையா ? தமிழகத்தில் வாழும்  முஸ்லீம்கள் தமிழ் நாட்டைச் சேர்ந்த மக்கள் இல்லையா ? முஸ்லீம்களுக்கு செய்யும் சேவைகள் நலப்பணிகளைச் சேராதா ? நான் முஸ்லீம் மக்களின் எதிரி அல்ல என்று வருடத்தில் ஒரு நாள் இஃப்தாரில் ஜெயலலிதா கூறுவது பச்சைப் பொய் என்று மக்கள் விளங்க மாட்டார்களா ?   


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்