ஞாயிறு, அக்டோபர் 30, 2011

முஸ்லீம்கள் பொருளாதாரத்தில் முன்னேறியவர்களாம் உளறுகிறார் ராமகோபாலன் !! ?

 ஏகஇறைவனின் திருப்பெயரால்...

முஸ்லீம்கள் பொருளாதாரத்தில் முன்னேறியவர்களாம்
உளறுகிறார்  ராமகோபாலன் !!




கடந்த 2007ல் மத்திய அரசால் கிருஸ்தவர்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர்;களுக்காக ப்ளஸ்-2 வில் ஐம்பது சதவிகிதம் மார்க் எடுத்த மாணவ, மாணவிகள் எஞ்சினியரிங், மற்றும் மருத்துவம் பயில விரும்பினால் அவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்குவதாக சட்டம் இயற்றப்பட்டது.

இந்த வருடத்திற்கான தகுதி, மற்றும் மார்க் அடிப்படையிலான விண்ணப்பங்கள் வரவேற்பதாக  சிறுபான்மை நல ஆணையம் அறிவித்திருந்தது. இதை ஜூன் 18ம் தேதி அன்று பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.

இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து சங்பரிவாரங்களின் வயிற்றில் புளி கரைக்கத் தொடங்கியது, எஞ்சினியரிங், மருத்துவம் போன்ற தொழில் கல்விகளில் முஸ்லீம்கள் படித்து முன்னேறத் தொடங்கினால் அடக்கி ஆளும் ஆரிய அதிகாரத்தின் சுருதி இறங்கி விடும் என்று நினைத்தவர்கள் மேற்படி சலுகைகள் முஸ்லீம்களுக்கு சென்றடையமால் தடுக்கும் முயற்சியில் களமிறங்கி உள்ளனர். 

பிற்படுத்தப்பட்ட எஸ்.சி, எஸ்.டி மக்களை உசுப்பேற்றி அவர்கள் மூலமாக பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுருக்கின்றனர்;;.

இவர்களின் விஷமப் பிரச்சாரத்தின் எதிரொலியாக ஓசூரில் மட்டும் ஏழு கல்லூரிகளில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கின்றனர்.

இது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தொடரும் என்றும், இது மாணவர்கள் மத்தியில் வரலாறு கானாத எழுச்சியை ஏற்படுத்தும் என்றும் பத்திரிகை பேட்டியில் கூறி எரியும் கலகத் தீயை மேலும் ஊதி விட்டிருக்கிறார் ராமகோபாலன். 

அதே பத்திரிகை பேட்டியில் பொருளாதாரத்தில் முன்னேறிய முஸ்லீம், கிருஸ்தவர்களுக்கு வாரி வழங்கும் மத்திய, மாநில அரசுகள் சமுதாயத்தில் பின்தங்கிய பிரிவினராகிய எஸ்.சி, எஸ்.டி களுக்கு முட்டுக்கட்டைப் போடுவது பச்சை துரோகம் என்றும் உளறிக் கொட்டி உள்ளார்.

(முஸ்லீம்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி இருப்பதால் கல்வியில் பெரும் பின்னடைவை அடைந்திருந்தனர் அதிலும் எஞ்சினியரிங், மருத்துவம் போன்ற தொழில் நுட்பகல்வி என்பது முஸ்லீம்களுக்கு ஏட்டுச் சுரைக்காயாகவே இருந்தது என்பதற்கு  ராஜேந்திர சச்சார், மற்றும் ரங்கநாத் மிஸ்ரா அறிக்கை இதை உண்மைப் படுத்தியதை உலகறியும். நிலமை இவ்வாறிருக்க முஸ்லீம்களை முன்னேறிய சமுதாயம் என்று உளறிக்கொட்டிய ராமகோபாலனின் உளறலை ஊடகங்களும் பிரசுரித்திருந்தது தான் மிகுந்த வேதனை அளிப்பதாக இருக்கிறது.)

உண்மைக்கு மாறானத் தகவலை இவர் கூறியதிலிருந்து இவர்கள் எஸ்.சி, எஸ்.டி மக்களின் முன்னேற்றத்திற்காகப் போராடவில்லை, மாறாக முஸ்லீம்களுக்கு செல்லும் சலுகைளை தடுத்து நிருத்தவே போராட்டத்தை தூண்டி விடுகின்றனர்.

எஸ்.சி, எஸ்.டி மக்களின் பெயரைச் சொல்லி இன்று போலிக் கண்ணீர் வடிக்கும் இவர்கள் தான் எஸ்.சி, எஸ்.டி மக்களின் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்ட மண்டல் கமிஷன் பரிந்துரையை நடைமுறைப் படுத்த விடாமல் முட்டுக் கட்டையாக இருந்தனர் என்பதை உலகறியும்.

அன்று மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்த விடாமல் தடுப்பதற்கு முன்னேறிய சமுதாயத்து மாணவர்களிடம் இனவெறியைத் தூண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தினர்.

இன்று முஸ்லீம்களுக்கு கிடைக்கவிருக்கும் சலுகையை தடுத்து நிருத்துவதற்காக பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்துகின்றனர்.

கடவுள் பெயராலேயே கலவரமூட்டும் இவர்களை ஹிந்து சமுதாய மக்களில் பெரும்பான்மையானவர்கள் அடையாளம் கண்டு வைத்திருக்கின்றனர்
.



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்