ஞாயிறு, ஜூன் 24, 2012

மாமா கட்சியின் சமுதாய துரோகம் மண்ணடி.

ஏகஇறைவனின் திருப்பெயரால்...




 
 
வாயிருந்தும் ஊமைகளாய்.
குரலெழுப்ப வாய்ப்பிருந்தும் இவர்கள் ஊமையாய் போன சந்தர்ப்பங்கள் இந்த ஓராண்டில் சட்டமன்றத்தில் எத்தனையோ நிகழ்ந்து விட்டன.

ஹஜ் மானியம் நிருத்தப்படும் என்று மத்திய அரசு அறிவிக்கப்பட்டதை அடுத்து சீனாவில் இந்துக்களால் புன்னிய தலமாக கருதப்படும் மானசரோவர் செல்பவருக்கு 40 ஆயிரம் வழங்கப்படும் என்றும்> நேபாளத்தில் உள்ள முக்திநாத்துக்கு செல்பவர்களுக்கு 10 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அம்மா(?) அறிவித்து அதில் குறைந்தது 500 பேர் இந்த சலுகையை இந்த ஆண்டு அடைந்து கொண்டர். 
 
மத்திய அரசு ஹஜ் மானியத்தை நிருத்தினால் என்ன இஸ்லாமிய சமுதாயத்தின் சகோதரியாகிய நான் மாநில அரசு நிதியிலிருந்து தருவதாக அவரால் அறிவிக்க முடிய வில்லை, இவர்களாவது தனது சமுதாய மக்களுக்கு மறுக்கப்பட்ட சலுகையை கேட்கலாம் ஏன் கேட்க வில்லை ? இதைக் கேட்பதற்காகத் தானே சட்டமன்றத்திற்குள் போக வேண்டும் என்றார்கள்

கிராம கோயில்களின் புணரமைப்பு நிதி 250 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டன> இந்த ஓராண்டில் அரசு நிதியிலிருந்து 364 கோயில் குளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. 

கிராமங்களில் கீற்றுக் கொட்டகையில் இயங்கும் எத்தனையோ பள்ளிவாசல்கள் கீற்று மாற்ற முடியாமல்> தொழுகைப் பாய்களை மாற்ற முடியாமல் கிழிந் நிலையில் கிடக்கின்றன> எத்தனையோ பள்ளிவாசல்களை ஒட்டிய குளங்கள் தூர் வார முடியாமல் சாக்கடையாக மாறிக் கிடக்கின்றன.

நம்முடைய வரிப் பணத்தில் குவிந்து கிடக்கும் அரசு நிதியிலிருந்து கோயில்களைப் புணரமைக்கலாம் பள்ளிவாசல்களின் புணரமைப்புக்காக கொடுக்கக் கூடாதா ? அதற்காக இவர்கள் குரல் எழுப்பக் கூடாதா ? இதைக் கேட்பதற்காகத் தானே ட்டமன்றத்திற்குள் போக வேண்டும் என்றார்கள்

முஸ்லீம்களுக்கு மூன்றரை சதவிகிதம் இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தித் தருவதாக அம்மா(?) ஏற்கனவே வாக்களித்திருக்கையில் 1349 பேர் அரசு மருத்துவப் பணிக்காக தேர்வு செய்யப்பட்டதில் அதிகப்படுத்த வில்லை என்றாலும் விகிதாச்சார அடிப்படையிலாவது முஸ்லிம்கள் தேர்வு செய்யப் பட்டிருக்கலாம். ஆனால்  ஒரு முஸ்லீம் கூட திட்டமிட்டு தேர்வு செய்யப்பட வில்லை.

இதற்காக இவர்கள் இதுவரை ஒருத் துறும்பைக் கூட எடுத்துப் போட வில்லை> இவர்கள் என்ன சமுதாயக் காவலர்கள் ? இது போன்று முஸ்லீம்களுக்கு மட்டும் மறுக்கப்பட்டு பிற சமுதாயத்தவருக்கு தாராளமாக வாரி வழங்கிய எத்தனையோ சலுகைகள் இந்த ஓராண்டில் மட்டும் அறிவிக்கப்பட்டதைப் பட்டியலிடலாம். 

இதற்கெல்லாம் குரல் கொடுப்பதற்காகத் தானே சட்டமன்றத்திற்குள் போக வேண்டுமென்றார்கள்> சட்டமன்றத்திற்குள் போயும் ஏன் குல் கொடுக்க வில்லை ? இதற்காக குரல் கொடுத்ததனால் இவர்கள் எத்தனை முறை குண்டுக்கட்டாக சட்டமன்றத்திலிருந்து தூக்கி வெளியே வீசப்பட்டார்கள் ? வளைகுடாவிலிருந்து 

விழலுக்கு இறைக்கும் நீர் போன்றது.
இஸ்லாமிய குற்றவியல் தண்டனையாகிய மரண தண்டனைக்கு எதிராக கூட்டம் நடத்துபவர்களுடன் சேர்ந்து கலந்து கொண்டது.

பூரண மதுவிலக்கல்லாது குடிக்கலாம்> ஆனால் குடிக்கக் கூடாது எனும் தா.பாண்டியன்> வை.கோ நடத்திய அரைவேக்காடுத் தனமானக் கூட்டத்தில் கலந்து கொண்டது.

இங்கிலாந்து அரசின் வைரவிழாவில் கலந்துகொள்ள இலங்கை அதிபர் ராஜபக்சேவிற்கு விடுத்த அழைப்பை திருப்பிப்பெற வலியுறுத்தி .தி.மு. நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டது. இவைகள் சமுதாயப் போராட்டங்களா ?

இது போன்ற சமுதாயத்திற்கு எள்ளலவும் பிரயோஜனம் அளிக்காத போராட்டங்களில் கலந்து கொள்வதற்காகத்தான் கந்தக பூமியில் வெந்து மடியும் மக்களிடத்தில் சமுதாயம் எனும் பெயரைக் கூறி நிதிப் பெறுகிறார்களா ? இதற்காகத் தான் தவ்ஹீத் பிரச்சாரம் முட்டுக்கட்டை என்றுக் கூறி தமுமுகவிலிருந்து தவ்ஹீத் வாதிகளை வெளியேற்றினார்களா ?
இவர்களுக்கு வசூல் செய்து அனுப்புகின்ற சகோதரர்கள் சிந்தித்துக் கொள்ளட்டும்.


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்